Tamil

இவை அனைத்தும் மக்களைப் பற்றியவை

ஒவ்வொரு மனிதரும் தனியானத் தேவைகள் , ஆர்வங்கள் மற்றும் இலட்சியங்களுடன் தனித்தன்மை உடையவர் என்று நாங்கள் நம்புகிறோம்.

நுண்ணறிவு இயலாமையுள்ள மக்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆதரவளிப்பதில் கம்யூனிட்டி லிவிங் டொரான்டோ முன்னோடியானது.

கம்யூனிட்டி லிவிங்க் டொரன்டோவில் நாங்கள் வழங்குகிறோம்….

ஒவ்வொரு நபருக்கும் தனித்தன்மை உடையதாக இருக்கக்கூடியதை திட்டமிடல்

தனிநபரை மையப்படுத்தும் திட்டங்கள் மூலம் , தனிநபர்கள் தங்கள் சமூகத்தின் வளங்களை ஆராய்வதற்கும். புதிய செயல்களை முயற்சிக்கவும் , புதிய அனுபவங்களை பெறவும் மற்றும் அந்த அனுபவங்கள் அடிப்படையில் அறிவக்கப்பட்ட முடிவுகளை செய்யவதற்கும் முடியும். இதன் மூலம் ? தனிப்பயனாக்கப்பட்ட ? அல்லது ? தனிநபர் மையப்படுத்தப்பட்ட ? ஆதரவு ஒவ்வொரு நபரின் ஆர்வம் , இலக்குகள் மற்றும் வெளிப்பாடுகளைச் சுற்றி உருவாக்கப்படுகிறது

பள்ளிக்கு பிறகான வாழ்க்கை மற்றும் போஸ்ட் 21 திட்டமிடல்.

நாங்கள் இளம் மக்களுக்கு வெற்றிக்கான சிறப்பான வாய்ப்பை அவர்கள் கல்வி அமைப்பை விட்டு வெளியேறும்போது திட்டமிடல் மற்றும் ? யூத் 2 வொர்க் ? போன்ற ஆதரவுகள் மூலம் வழங்குகிறோம். பள்ளிக்கு பிறகான வாழ்க்கைக்கு செல்வதற்கான மென்மையான மாறுதலை உண்டாக்கி இளைஞர்களுக்கு தங்களின் வேலைவாய்ப்பு இலக்குகள் , மற்றும் அவர்களின் சொந்த ஆர்வத்தைப் பொறுத்து வாய்ப்புகளை நாங்கள் உள்ளுர் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற சமூக பங்குதாரர்களுடன் பணியாற்றுவதன் மூலம் வழங்குகிறோம். இது தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவளிக்கும் பணி வழங்கல் மூலமாக நடைபெறுகிறது. ஏற்கனவே பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு அவர்களின் தொழில் இலக்குகள் மற்றும் அனுபவங்களை அடையாளம் காண்பதற்கு மற்றும் தொழிலின் பாதையை தனிப்பட்டதாகவும் மற்றும் அர்த்தமுள்ளதாகவும் ஆகிட உதவுகிறோம்.

பணிக்குத் தயாராதல்

கம்யூனிட்டி லிவிங்க டொரன்டோவில் நாங்கள் ஒவ்வொரு தனிப்பட்டவருடனும் அவர்களின் தொடர்புகளுடனும் அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அனுபவங்களை அவர்களின் சொந்த இலக்குகள் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் அறிந்திட பங்களிப்பாளராகிறோம். தொழில்பயிற்சியின் போது , திறன் மற்றும் வேலை மதிப்பீடுகள் அளிக்கப்பட்டு சமூக பங்களிப்பு மூலம் மதிப்பிடப்படுகிறது. நாங்கள் தனிநபர்களுக்கு , அவர்களின் தொடர்பின் உறுப்பினர்களுக்கு , சமூகக் குழுக்களுக்கு மற்றும் பங்குதாரர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விருப்பத்தேர்வுகளுக்கான தகவல் சுற்றுலா மற்றும் வியாபார உரையினை அளிக்கிறோம்.

தொழில் வாய்ப்புகள் மற்றும் அனுபவங்கள்
மக்களின் பணிகள் அவர்களின் தனிப்பட்ட தொழில் இலக்குகளின்படி வேறுபடுவதால் , எங்களின் பயிற்சிபெற்ற அனுபவமிக்க ஊழியர்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை கண்டுகொள்வதற்கும் மேலும் ஆதரவு , பயிற்சி மற்றும் ஆலோசனைகளை தனிப்பட்டவர்களின் இலக்குகளை அவர்களின் திட்டம் மூலமாக அறிந்து தருகிறார்கள். கொரியர் சர்வீஸ்கள் , பராமரிப்பு பணிகள் , சில்லறை விற்பனை , லாண்டரி மற்றும் ட்ரைக்ளீனிங் சேவைகள் , உணவு சேவைகள் , கிரவுண்ட்ஸ்கீப்பிங் , மளிகைக் கடை எழுத்தாளர்கள் , இசை மற்றும் வீடியோ கடைகள் , பேக்கேஜிங் மற்றும் அசெம்பிளி , மற்றும் அடுக்குதல் , கிழித்தல் , ஒப்பந்தம் மற்றும் எழுத்துப்பணிகள் போன்ற அலுவலகப் பணிகள் ஆகியவை தற்போது நுண்ணறிவு இயலாமையுள்ள மக்களால் நடக்கப்படுகிறது.

திறனை வளர்த்துக்கொள்ளுதல்
கல்வி , நிதி நிர்வாகம் , சமூக திறன்கள் , உறவுகளை உருவாக்குதல் போன்ற பகுதிகளில் திறனை வளர்ப்பது மற்றும் பயணப் பயிற்சி போன்றவை தன்னம்பிக்கையுள்ள சமூகத் தொடர்பு மற்றும் பங்கேற்றலையும் மேம்படுத்துகிறது. ரெஸ்யும் எழுதுதல் , கணினி மற்றும் நேர்முகத்தேர்வு திறன்கள் ஒரு மனிதரை வேலைவாய்ப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்ட திறன்களை உருவாக்கிகொள்வதிலும் தயார்படுத்துகிறது.

தன்னார்வ அனுபவங்கள்
தங்களின் சேவையை சமூகத்திற்கு திரும்ப அளிப்பதில் மகிழ்பவர்களுக்காக நாங்கள் தன்னார்வ வாய்ப்புகளான முதியவர்களுக்காக கடைகளுக்குச் செல்வது , நோயாளிகளை மருத்துவமனையில் பார்ப்பது , வண்டிகளில் உணவுப்பொருள் வழங்குவது மற்றும் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களில் உதவுவது போன்றவற்றை அறிந்துகொள்ள நாங்கள் தனி நபர்களுக்கு உதவுகிறோம்.

ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகள்
செயல்களை அனுசரிப்பது மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளில் ஈடுபடுவது மக்களை புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் , புதிய நண்பர்களை சந்திப்பதிலும் , மற்றும் சமூகத்தில் பங்கேற்கவும் செய்கிறது. செயல்பாடுகள் ஒரு நபரின் விருப்பம் , திறமை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சிறப்பு ஆதரவு
கம்யூனிட்டி லிவிங் டொரன்டோவில் , நாங்கள் சில மக்களுக்கு தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பிற தினசரி செயல்பாடுகளுக்காக உயர்ந்த அளவிலான ஆதரவு தேவைப்படுகிறது என்பதை அறிந்துள்ளோம். தனிப்பட்ட விருப்பங்களை மதித்து மற்றும் அவர்களின் சொந்த இலக்குகள் மற்றும் ஆர்வங்களுக்கு பதிலளிப்பதன் மூலம் எங்களால் வழங்கமுடியும். ஓய்வு , சமூக பங்கேற்பு மற்றும் வாழ்வியல் திறமைக்கான செயல்பாடுகள் போன்றவை பாதுகாப்பான மற்றும் தூண்டக்கூடிய , பணிகளுக்கு மாற்றானவைகள் அடையாளம் காணப்படுகின்றன.

மேலும் அறிந்து கொள்ளுங்கள்

சமூகத்தில் ஒரு நபரின் அர்த்தமுள்ள கடமையின் கனவுகள் நனவாக எவ்வாறு கம்யூனிட்டி லிவிங் டொரன்டோவால் முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். சில மக்கள் கூடுதலான திட்டங்களையோ அல்லது சேவைகளையோ விரும்புவார்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். நாங்கள் இதை பற்றி விவாதித்து மற்றும் எவ்வாறு தனிநபரின் விருப்பங்களை மற்றும் தேவைகளை நிறைவு செய்வதை பற்றி அறிவதில் மகிழ்ந்திருக்கிறோம்.

எங்களை உங்களின் அருகில் உள்ள பிராந்திய அலுவலகம் மூலம் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்களின் இணைய தளத்தைப் பார்க்கவும்:

Corporate Services: 416.968.0650

Information: Programs and Services: 647.426.3220

contactus@cltoronto.ca  

வேலைவாய்ப்பு , தொழில் அல்லது சமூக விருப்பத் தேர்வுகள்

தனிப்பட்ட இலட்சியங்கள் , ஆர்வங்கள் , மற்றும் ஆதரவுத் தொடர்புகளை , உருவாக்கிக்கொள்வதன் மூலம் சமூகத்தில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழமுடியும். நுண்ணறிவு இயலாமையுள்ள பெரியவர்களுக்கு வரிவான பல தனித்தன்மையுடைய விருப்பத்தேர்வுகளை தனிநபரை மையப்படுத்தும் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நிதியை நிர்வகிப்பது ஆகியவற்றை மேம்படுத்த விரிவான அனுபவங்களுடன் லிவிங் டொரன்டோ அளிக்கிறது.

கம்யுனிட்டி லிவிங் டொரன்டோ தற்போது 1,100 க்கும் மேற்பட்ட முழுமையாக பல்வேறு விதமான தன்னார்வப்பணிகள் , ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் போன்ற சமூகஅடிப்படையிலான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிக்கிறது. விருப்பங்கள் , ஆதரவு தொடர்புகளின் விரிவாக்கம் , வாய்ப்புகள் மற்றும் அனுபவங்கள் , போன்றவற்றை உயர்த்தக்கூடிய சமூக வளங்கள் மற்றும் பங்களிப்புகள் மூலம் ஒரு நபர் ஒரு நாளில் தங்களுக்கு இணக்கமாவும் மற்றும் ஊக்கமாகவும் செய்யக்கூடிய செயல்கள் குறித்து ஆராய்கிறது.